 
                                        தமிழ்
                                                உலகத்தின் தொன்மையான மொழிகளில் இன்றுவரை பயன்பாட்டில் உள்ள மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்றாகும். செம்மொழியாம் நம் தாய் மொழி தமிழையும்  அதன் பண்பாட்டு விழுமியங்களையும்  நமது பாடசாலையில் மழலையர் முதல் பெரியோருக்கு கற்பிப்பதில்  பேருவகை அடைகின்றோம்.
                                                
                                                செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடமானது, தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பாடத்திட்டத்தை பின்பற்றி மழலையர் நிலை , பாலர் நிலை மற்றும்  வளர்தமிழ்1 முதல் வளர்தமிழ் 12 வரை தமிழை நம் சிறார்களிற்கு கற்பிக்கின்றோம்.
                                                மேலும் கேம்பிரிட்ஜ் தமிழ் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைகளிற்கும் எமது மாணவர்களை அணியமாக்குகின்றோம்.
                                            
 
                                        பரதநாட்டியம்
                                                பரதநாட்டியம் என்பது இந்தியாவின் பழைமையான பாரம்பரிய நடன மரபாகும். இது  எட்டு இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் முதன்மையானதுமாகும்.  பரதநாட்டியமானது இந்தியாவில் தமிழ்நாட்டில் உருவாகியதுடன் இது தமிழ்நாட்டின் உத்தியோகபூர்வ நடனமாகவும் திகழ்கின்றது.
                                                
                                                பரதநாட்டியம் பல்வேறு வகையான நடன மரபுகளைக் கொண்டுள்ளது, செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடத்தில் நாங்கள் கலாசேக்த்ரா நடன மரபைப் கற்பிக்கின்றோம், இது கட்டமைக்கப்பட்ட அடவுகள் (வடிவமைப்பு), அழகான அபிநயங்கள் நிறைந்த ஒரு நடன மரபாகும்.
                                                நாங்கள் OEBL இன்  பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றோம்
                                            
 
                                        கர்நாடக சங்கீதம்
                                                பண்டைய காலத்தில் நிலவிய பண்ணிசையே இன்று பலராலும் அழைக்கப்படும் இந்திய இசைவடிவங்களில் ஒன்றான  கர்நாடக சங்கீதமாகும்.  இவ் இசைவடிவமானது தென் இந்தியாவில் தோன்றி இன்றுவரை பலராலும் விரும்பப்பட்டு வரும் இசையாகும். இவ் இசைக்கு சுருதி, இராகம்(பண்), தாளம் என்பன ஆதார அம்சங்களாகும்.  கர்நாடக சங்கீதத்தின் சிறப்பழகு ஒவ்வொரு இராகத்தின் கமக பிரயோகங்கள் கையாளும் விதத்தில் அமைந்துள்ளது.
                                                
                                                செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடத்தில் நாங்கள் OEBL இன்  பாடத்திட்டத்தைப் பின்பற்றி மாணவர்களிற்கு சங்கீதத்தை பயிற்றுவிக்கின்றோம்
                                            
 
                                        மிருதங்கம்
                                                மிருதங்கம் ஓர் தொன்மையான தோற்கருவியாகும்.  சங்க இலக்கியத்தில்    தண்ணுமை என அழைக்கப்பட்ட இசைக்கருவியின் இன்றைய வடிவமே மிருதங்கமாகும்.
                                                
                                                செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடத்தில் இத் தொன்மையான  இசைக் கருவியை இன்றும்  நம் மாணவர்களிற்கு பயிற்றுவிப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.
                                                நாம் இந்நாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட OFQUAL பாடத்திட்டத்தை பின்பற்றியே மிருதங்கத்தை மாணவர்களிற்கு பயிற்றுவிக்கின்றோம்.
                                            
 
                                        தபேலா
                                                தபேலா என்பது சற்று வித்தியாசமான அளவுகள் மற்றும் வடிவங்களைக் கொண்ட இரட்டை முரசு ஆகும். தபேலாவின் இசை மட்டுமல்லது அதனை உள்ளங்கை மற்றும் விரல்களின் மூலம் வாசிக்கும் நுட்பம் கூட ஓர் கண்கவர் காட்சியாகும்.
                                                
                                                நாம் இந்நாட்டினால் அங்கீகரிக்கப்பட்ட OFQUAL பாடத்திட்டத்தை பின்பற்றியே மாணவர்களிற்கு தபேலாவை பயிற்றுவிக்கின்றோம்.
                                            

